ஷாருக்கானுக்கு ஒய்பிளஸ் பாதுகாப்பு

1 mins read
786aa49f-e236-451e-b2aa-a10e81ba7f74
நடிகர் ஷாருக்கான் - கோப்புப்படம்

மும்பை: நடிகர் ஷாருக்கான் அண்மையில் அட்லீ இயக்கத்தில் நடித்து வெளியான ஜவான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அதேபோல் ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான் படமும் ஆயிரம் கோடி வசூலித்தது.

ஜவான், பதான் என அடுத்தடுத்து இரண்டு பெரிய வெற்றியைக் கொடுத்த நடிகர் ஷாருக்கானுக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்திருப்பது குறித்து உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து அவருக்கு ஒய்பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவின் சிறப்புப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 6 துப்பாக்கி ஏந்திய காவலர்கள் அவருக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்க உள்ளனர். மேலும் ஷாருக்கானின் வீட்டிற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்