தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.23,500 கோடிக்கு நவீன ஆயுதங்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம்

1 mins read
0f8bf908-bb37-46d5-b022-329b1341c8ac
அவசரகால ஆயுதக் கொள்முதல் திட்டத்தின்கீழ் இந்தியா ஆயுதங்களை வாங்குகிறது. - கோப்புப்படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: இந்தியா அதன் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் விதமாக ரூ.23,500 கோடிக்கு நவீன ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தங்கள் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.  

அவசர கால ஆயுதக் கொள்முதல் திட்டத்தின் கீழ் கண்காணிப்புக் கருவிகள், தகவல் தொடர்புச் சாதனங்கள், ராணுவ வாகனங்கள், நவீன ஆயுதங்கள், வானூர்திகள், ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

ஆயுதங்களை பல்வேறு நிறுவனங்களிடமிருந்து  இந்தியா வாங்குகிறது. 

அதிகபட்சமாக ராணுவத்துக்காக 70 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 

கடற்படைக்கு 65 ஒப்பந்தங்களும் விமானப்படைக்கு 35 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளன. 

இதில் ராணுவத்துக்கு ரூ.11,000 கோடியிலும், இந்திய விமானப் படைக்கு ரூ.8,000 கோடியிலும், கடற்படைக்கு ரூ.4,500 கோடியிலும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்தியா, சீனா இடையே கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கிழக்கு லடாக் அருகே அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் மோதல் ஏற்பட்டது. 

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தப் பதற்றத்தைத் தணிக்க இந்தியா, சீன ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த பதற்றமான சூழ்நிலையில், இந்தியாவின் ஆயுதப்படைகளுக்கு நவீனரக ஆயுதங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

குறிப்புச் சொற்கள்