தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ்

1 mins read
a7698355-2aa5-428d-b9cb-dc18edfb7854
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே வெடித்துள்ள போரை நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: சட்டசபைத் தேர்தல் வருவதையடுத்து காங்கிரஸ் கட்சி அதன் தலைவர்களுடனும் முக்கிய தொண்டர்களுடனும் திங்கட்கிழமை கூட்டம் நடத்தியது.

இந்தக் கூட்டத்தில் தேர்தல் தொடர்பான வியூகங்களை வகுப்பது பற்றி ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே வெடித்துள்ள போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தப் போரில் காங்கிரஸ் கட்சி பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்து உள்ளது.

“இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் உடனடியாக நிறுத்தப்பட்டு, இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது,” என்று காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்