தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்காகச் சிறப்பு ரயில்

1 mins read
bb6e7674-dd6c-41de-be1c-b283a77be02e
கோப்புப்படம்: - ஐஏஎன்எஸ்

மும்பை: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் ஆட்டத்திற்காக சிறப்பு ரயில்களை இயக்க மேற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கவுள்ளது.

மும்பை, சூரத், வதோதரா, ஆனந்த், பரூச் ஆகிய நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் சேவை வழங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆட்டத்தைக் காண இந்தியாவின் பல நகரங்களில் இருந்து ரசிகர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் என்பதால் விளையாட்டரங்கின் அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

ஆட்டம் நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடக்கிறது. அதில் கிட்டத்தட்ட 132,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கலாம்.

குறிப்புச் சொற்கள்