ஒடிசாவில் ரயில் பெட்டி உணவகம்

1 mins read
113f519a-e989-484a-bc5e-05b45fb4d40f
ஒடிசா ரயில் பெட்டி உணவகத்தின் அழகிய உட்புறத் தோற்றம். - படம்: இந்திய ஊடகம்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தின் ராயகடா ரயில் நிலையத்தில் புதிதாக ரயில் பெட்டி உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டியாகச் சேவை வழங்கிவந்த பழைய ரயில் பெட்டி இவ்வாறு உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா மாநில சட்ட அமைச்சர் ஜெகன்னாத் சரக்கா இந்த உணவகத்தைத் திறந்துவைத்தார்.

ஒப்பந்த முறையில் தனியார் நிறுவனம் ஒன்று இந்த ரயில் பெட்டி உணவகத்தை நடத்தவிருக்கிறது.

இது பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் புதுமையான அனுபவத்தைத் தருவதோடு ரயில்வே துறைக்குக் கூடுதல் வருவாய்க்கும் வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த ரயில் பெட்டி உணவகத்தால் ராயகடா ரயில் நிலையத்தின் தோற்றம் மேம்படும் என்கின்றனர் அதிகாரிகள்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்