திருந்திய திருடனின் சுயசரிதை

திருந்திய திருடனின் சுயசரிதை

படம்: இந்திய ஊடகம்

12 Oct 2023 - 9:33 pm

1 mins read

திருவனந்தபுரம்: கேரளாவின் திருவங்காடு பகுதியைச் சேர்ந்த சித்திக் என்பவர் சிறு வயதிலிருந்தே 500க்கு மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதற்காக சிறைத்தண்டனை பெற்றவர்.

கடந்த 34 ஆண்டுகளாக இவர் சிறையில் இருக்கிறார்.

இனி திருந்தி வாழ முடிவெடுத்துள்ள இவர், கண்ணூர் மத்திய சிறைச்சாலையிலிருந்து இம்மாத இறுதியில் விடுவிக்கப்படுவார்.

இவர் தன் வாழ்க்கையை ‘ஒரு திருடனின் சுயசரிதை’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார். குடும்பத்தில் திருடத் தொடங்கி, பின்னர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதையும் கொள்ளையடித்த பணத்தை அனாதை இல்லங்களுக்கு நன்கொடை தந்ததையும் இந்த புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்