தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் எதிரொலி: புதுடெல்லியில் விழிப்புநிலை

1 mins read
f0d192ad-4fd7-4d31-9c51-b53cfa273417
புதுடெல்லியின் பள்ளிவாசல்களையும் யூத வழிபாட்டுத் தலங்களையும் சுற்றிப் பாதுகாப்பு உயர்த்தப்பட்டுள்ளது. - படம்: என்டிடிவி

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள பள்ளிவாசல்கள், யூத வழிபாட்டுத் தலங்கள், இஸ்ரேலியத் தூதரகம் ஆகியவற்றைச் சுற்றிலும் பாதுகாப்பு உயர்த்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் போர் நடந்துவரும் நிலையில், புதுடெல்லியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறும் வேளையில் பாதுகாப்புப் பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் அமைந்திருக்கும் யூதத் தலங்களிலும் பாலஸ்தீன ஆதரவாளர்கள் இருக்குமிடங்களிலும் பாதுகாப்பு உயர்த்தப்பட்டதை அடுத்து இந்தியாவும் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்கிறது.

கடந்த வியாழக்கிழமை, பிரான்ஸ் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்