தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காரின் முன்பகுதியில் இருந்த ரூ.2.5 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்

1 mins read
0208aabe-964f-42d4-a92a-f0b6ccec3afa
பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகளில் ஒன்று. - படம்: ஐஏஎன்எஸ்

கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், தென் கோல்கத்தாவில் வாகனம் ஒன்றின் இயந்திரம் உள்ள பாகத்தில் கடத்தப்பட்ட ரூ.2.5 கோடி பெறுமானமுள்ள தங்கக் கட்டிகளை சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

இதன் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். மேற்கு ஆசியாவை அனைத்துலக தலைமையகமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றுக்காக அவர்கள் வேலை செய்தனர். தங்க நகைகளைத் தயாரிக்கும் தொழிலும் அந்நிறுவனம் ஈடுபடுகிறது.

தகவல் அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தல் தங்கத்தைக் கொண்டு சென்ற காரைப் பின்தொடர்ந்தனர். அந்த காரின் முன்பகுதியில் நான்கு தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், அதிகாரிகள் அந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

குறிப்புச் சொற்கள்