நவராத்திரி பிரமோற்சவ விழா தொடங்கியது

நவராத்திரி பிரமோற்சவ விழா தொடங்கியது

1 mins read
1f7788c5-a940-45c7-b099-4c3dc2086ab6
வரும் 19ஆம் தேதி கருட சேவை நடைபெறுகிறது - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இரவு 7 மணி அளவில் ஏழுமலையான் பெரிய சேஷ வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

பிரமோற்சவ விழா நடைபெறும் ஒன்பது நாட்களும் விஐபி பிரேக் தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வருபவர்களுக்கான சிறப்பு தரிசனங்கள், ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்து உள்ளது. இதனால் சாதாரண பக்தர்கள் அதிக அளவில் குறைந்த நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

பிரமோற்சவத்தின் முக்கிய நாளான வரும் 19ஆம் தேதி கருட சேவை நடைபெறுகிறது.

கருட சேவையையைக் காண நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவியவிருக்கின்றனர்

அது மட்டுமல்லாமால் வருகிற 18ஆம் தேதி மாலை முதல் 20ஆம் தேதி காலை வரை மலைப்பாதைகளில் பைக்குகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளன. வருகிற 23ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது என்று மாலை மலர் செய்தி வெளியிட்டுள்ளது.

திருப்பதியில் சனிக்கிழமை அன்று 67,785 பேர் தரிசனம் செய்தனர். ரூ 2.78 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

குறிப்புச் சொற்கள்