உணவு விழாவில் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

உணவு விழாவில் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

1 mins read
03c57fe3-a293-43b1-8ae7-1cbf49a534af
பன்னிரெண்டு மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பூவம் வயல் பகுதியில் தொடக்கப்பள்ளியில் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உணவு விழா நடத்தப்பட்டது.

கோழிக்கோடு எல்பி பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பொருள்களை கொண்டு வந்து உணவு தயாரித்தனர் என்று கூறப்படுகிறது.

பிறகு தாங்கள் சமைத்த உணவை மாணவர்கள் சாப்பிட்டனர். இதில் ஏறக்குறைய 12 மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்