தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்று மாநில சட்டசபை தேர்தலுக்கு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

1 mins read
a226e2c2-f091-477e-acf0-c8379bb9408b
மூன்று மாநிலங்களில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் இத்தேர்தல் கட்டம் கட்டமாக நடக்கிறது.

 இதற்கான அட்டவணையை அண்மையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

மிசோரமில் நவம்பர் 7, சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17, மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17, ராஜஸ்தானில் நவம்பர் 25 மற்றும் தெலுங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என ஆணையம் கூறியுள்ளது.

ஐந்து மாநிலங்களிலும் டிசம்பர் 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

சத்தீஸ்கரில் 30 வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியலை அது வெளியிட்டுள்ளது. 

இதில் முதல்வர் பூபேஷ் பாகல் படான் தொகுதியிலும், துணை முதல்வர் சிங் தியோ அம்பிகாபூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இதேபோல், தெலுங்கானா மாநிலத்தில் 55 பேர் கொண்ட முதல்கட்ட பட்டியலை காங்கிரஸ் வெளியாக்கியுள்ளது.

மாநிலத் தலைவர் ரேவந்த் கோடங்கல் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 144 பேர் கொண்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில் மாநிலத் தலைவரும் முன்னாள் முதல்வருமான கமல்நாத், சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

குறிப்புச் சொற்கள்