இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது 70 பிரியாணி வாங்கிய குடும்பம்

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது 70 பிரியாணி வாங்கிய குடும்பம்

1 mins read
b8e36b26-16e8-4706-a194-8563c31717ba
படம்: - என்டிடிவி

சண்டிகர்: இந்தியாவில் உணவு விநியோகச் சேவை வழங்கும் கைப்பேசிச் செயலிகளில் ஒன்று ‘ஸ்விக்கி’.

உலகக் கிண்ணத்துக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுவரும் வேளையில் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று இணையத்தில் இப்போது வெகுவாகப் பரவிவருகிறது.

“சண்டிகரில் உள்ள ஒரு குடும்பத்தினர் ஒரே நேரத்தில் 70 பிரியாணி பொட்டலங்களை வாங்கியுள்ளனர். ஒருவேளை அவர்களுக்குப் போட்டியில் யாருக்கு வெற்றி என ஏற்கெனவே தெரியும் போலிருக்கிறது.#INDvsPAK,” என்று சனிக்கிழமை (அக். 14) எக்ஸ் தளத்தில் அது பதிவிட்டது.

படம்:
படம்: - ஸ்விக்கி/எக்ஸ்

இந்தப் பதிவு, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலவரப்படி 109,000 முறை பார்வையிடப்பட்டுள்ளது. 1,700க்கு மேற்பட்டோர் விருப்பக் குறியீடு இட்டுள்ளனர்.

இது விளம்பர உத்தி என்றும் இது கொண்டாட்ட நேரம் என்றும் இணையவாசிகள் பலரும் பல்வேறு கருத்துகளைப் பின்னூட்டமிட்டுள்ளனர்.

அகமதாபாத்தில் சனிக்கிழமை நடந்த உலகக் கிண்ண ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானைத் தோற்கடித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்