தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாக்குச் செலுத்துவோருக்கு இலவச காலையுணவு

1 mins read
2875435e-d79a-4674-90c5-d4a10b2c7f56
இலவச போஹா, ஜிலேபி - படம்: ஊடகம்

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் வாக்குப்பதிவை அதிகரிக்க, வாக்குப்பதிவு அன்று காலை 9 மணிக்குள் வாக்கு செலுத்துவோருக்கு போஹா, ஜிலேபி அடங்கிய காலையுணவு இலவசமாக வழங்குகிறது ஓர் உணவகம்.

இந்தூரில் ’56 சப்பன் துக்கன்’ எனும் பல்வேறு உணவு வகைகள் விற்கும் உணவகங்கள் அறிவித்துள்ளன. அதற்கு பின் வாக்கு செலுத்திவிட்டு வந்தால் கட்டணத்தில் 10% கழிவு என்றும் அறிவித்துள்ளன.

மத்தியப்பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அதிகமான மக்களை வாக்களிக்க ஊக்குவிப்பதற்காக இந்த சலுகையை அறிவித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்