தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியல் கொலை வழக்கு: மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவர் விடுவிப்பு

2 mins read
a4a3f1e8-dbc3-4358-ad56-d3e0c9c2773f
சுரேந்தர் கோலி, மொகிந்தர் சிங் பாந்தர் - கோப்புப்படம்

பிரயாக்ராஜ்: நொய்டாவின் நிதாரி தொடர் கொலை வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் தொழிலதிபர் மொகிந்தர் சிங் பாந்தரும் அவரது வீட்டு உதவியாளர் சுரேந்தர் கோலியையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இருவரும் கிட்டத்தட்ட 12 வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, பாலியல் வன்கொடுமை, கொலை குற்றச்சாட்டில் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத் அருகில் நிதாரி பகுதியிலுள்ள ஒரு பங்களாவில் கடந்த 2006ஆம் ஆண்டு குழந்தைகள் உள்பட 19 பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மொகிந்தர் சிங் பாந்தரும் சுரேந்தர் கோலியும் கைதுசெய்யப்பட்டனர்.

கோலி குழந்தைகளை வீட்டிற்கு வரவழைத்து, அவர்களுக்கு இனிப்புகள், சாக்லேட்களை வழங்கி, கொலை செய்து, சடலங்களுடன் உடலுறவு கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் நரமாமிசம் உண்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது.இருவருக்கு எதிராக 2007ஆம் ஆண்டில் 16 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த வழக்கின் விசாரணையில் சிறுமிகள், இளம்பெண் உள்ளிட்ட 19 பேரையும் பாலியல் பலாத்காரம் செய்து புதைக்கப்பட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து பங்களாவின் உரிமையாளர் மொனீந்தர் சிங் பாந்தர் மற்றும் அவரது வீட்டு வேலைக்காரர் சுரேந்திர கோஹ்லி என்பவரை சிபிஐ காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லாததால் தொழிலதிபர் மொகிந்தர் சிங் பாந்தர், அவரது வீட்டு உதவியாளர் சுரேந்தர் கோலியை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்