தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுத்தையைக் கல்லால் தாக்கி குழந்தையை மீட்ட தாய்

1 mins read
07fac061-6ef7-43a8-b477-d6f7501e9964
இந்தியாவின் பல பகுதிகளிலும் சிறுத்தை தாக்குவது அதிகரித்துள்ளது. - கோப்புப் படம்

மும்பாய்: கற்களை வீசி சிறுத்தையை விரட்டி குழந்தையைக் காப்பாற்றியுள்ளார் தாய். இச்சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் ஜுன்னர் வனப்பகுதியை அடுத்த தார்ன் டேல் என்ற கிராமத்தில் வியாழக்கிழமை நடந்துள்ளது.

அக்கிராமத்தில் ஆடு வளர்க்கும் சோனல் கார்கல், சில தினங்களுக்கு முன்பு கிராமத்துக்கு அருகே உள்ள திறந்தவெளியில் ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு அங்கேயே தனது 7 மாத ஆண் குழந்தை, கணவருடன் தூங்கி உள்ளார்.

குழந்தையின் அழுகுரலைக் கேட்டு தூக்கத்திலிருந்து எழுந்த சோனல், சிறுத்தை குழந்தையைக் கவ்வி இருப்பதைப் பார்த்து முதலில் அதிர்ந்தார். பிறகு நிதானமாக தன் மகனைச் சிறுத்தையிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

புலியை நோக்கி விரைந்த அவர், கையில் இருந்த கல்லால் புலியைத் தாக்கியுள்ளார். அவரது தாக்குதலுடன், குழந்தையும் வீறிட்டு அழுததில், குழந்தையை விட்டுவிட்டு புலி வயலுக்குள் தப்பி ஓடிவிட்டது. பிறகு காயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்