தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியல் தொந்தரவுக்கு எதிர்ப்பு; மாணவி, 10 பேர் மீது துப்பாக்கிச் சூடு

1 mins read
72bca8f7-15c0-44db-af59-d43f2f74ef50
சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. - படம்: இந்திய ஊடகம்

மஹோபா: உத்தரப் பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவியும் அவரைச் சேர்ந்தவரும் சுடப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 10 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.

பிந்தோ கிராமத்தில் வசித்து வரும் மாணவி ஒருவர் கல்லூரிக்கு செல்லும்போது அன்றாடம் ஜிதேந்திர திவாரி என்பவர் அவரைப் பின்தொடர்ந்து சென்று தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். ஒரு வாரமாகத் தொந்தரவு செய்து வந்த அந்த நபருக்கு மாணவி கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார்.

அதனால் திவாரியும் அவருடைய தந்தையும் மாணவியின் வீட்டுக்குச் சென்று துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகேயுள்ள சுகாதார நல மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சைக்கு பின்னர் அவர்களின் நிலைமை சீரடைந்து உள்ளது. எழுவர் மஹோபா மாவட்ட மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

குற்றவாளிகளைப் பிடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மஹோபா மாவட்ட காவல்துறை உயர் அதிகாரி அபர்ணா குப்தா கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்