11,000 பழைய வாகனங்களை அழிக்கிறது மத்திய ஆயுதப்படை

11,000 பழைய வாகனங்களை அழிக்கிறது மத்திய ஆயுதப்படை

1 mins read
645088da-04fa-433f-948c-cc12764f89d0
படம்: - தமிழ் முரசு

புதுடெல்லி: மத்திய ஆயுதப்படையில் புழக்கத்தில் இருந்துவரும் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் அழிக்கப்படவுள்ளன.

எல்லை பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் காவல் படை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, அசாம் ரைபிள்ஸ், இந்தோ திபேத்திய எல்லை காவல் படை, தேசிய பாதுகாப்புப் படை போன்ற மத்திய ஆயுதப்படைகளின் வாகனங்களில், 15 ஆண்டு பழமையான வாகனங்களை அடையாளம் காணும் பணியை மத்திய உள்துறை அமைச்சு மேற்கொண்டது. அவ்வகையில் 11,000 ஆயிரம் பழைய வாகனங்கள் அழிக்கப்பட வேண்டிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுபோல், மாநிலங்களில் காவல் துறைக்குச் சொந்தமான பழைய வாகனங்களை அழித்துவிட்டு, சிறந்த தொழில்நுட்பமும், எரிபொருள் சிக்கனமும் கொண்ட புதிய வாகனங்களை பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய உள்துறை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்