உ.பி.: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட காவலர் நீக்கம்

உ.பி.: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட காவலர் நீக்கம்

1 mins read
8cd8cb82-9fa2-470e-8e4a-6d2e6a02dbee
படம்: - தமிழ் முரசு

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் போர் நடந்து சூழலில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நன்கொடை கோரி சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.

அதையடுத்து, அவரை உ.பி. மாநிலக் காவல்துறை தலைமையகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்தக் காவலர் லக்கிம் மாவட்டத்தைச் சேர்ந்த சுகைல் அன்சாரி என்று கூறப்படுகிறது.