அமித்ஷா மகன் பாஜகவில் இல்லை: அசாம் முதல்வர்

அமித்ஷா மகன் பாஜகவில் இல்லை: அசாம் முதல்வர்

1 mins read
4f9c5045-61c6-4697-8a54-3dc7a99f09c7
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா. - படம்: இந்திய ஊடகம்

கவுகாத்தி: மிசோரம் மாநிலத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரின் மகன்கள் குறித்து கேள்வி எழுப்பி ‘வாரிசு அரசியல்’ என தனது கருத்தைப் பதிவு செய்தார்.

அதற்குப் பதில் அளிக்கும் விதமாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியுள்ளார்.

“முதலில் வாரிசு அரசியல் என்பதன் அர்த்தத்தை அவர் (ராகுல் காந்தி) புரிந்துகொள்ள வேண்டும். அமித் ஷாவின் மகன் பாஜகவில் இல்லை. ஆனால் ராகுல் காந்தியின் ஒட்டுமொத்த குடும்பமும் காங்கிரசில் இருக்கிறது. ராகுல் காந்தியின் குடும்பத்தில், அம்மா, அப்பா, தாத்தா, சகோதரி என எல்லாரும் கட்சியைக் கட்டுப்படுத்தும் இடத்தில் இருந்தார்கள், இருக்கிறார்கள்.

“காங்கிரஸ் கட்சியை பிரியங்கா காந்தி கட்டுப்படுத்துவதைப் போல ராஜ்நாத் சிங்கின் மகன் பாஜகவைக் கட்டுப்படுத்தவில்லை. இந்த விவாதத்தில் அமித்ஷாவின் மகன் எங்கிருந்து வருகிறார். அவர் பாஜகவில் இல்லை,” என்றார்.

குறிப்புச் சொற்கள்