சந்திரபாபு நாயுடுவின் காவல் நவம்பர் 1 வரை நீட்டிப்பு

சந்திரபாபு நாயுடுவின் காவல் நவம்பர் 1 வரை நீட்டிப்பு

1 mins read
2a17df70-1dc4-4661-9c95-e3d2e88b6697
ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. -

விஜயவாடா: ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் செப்டம்பர் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த ஊழலால், அரசுக்கு ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விஜயவாடாவில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை நீதிமன்றம், இந்த ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவின் காவலை, வருகிற நவம்பர் 1ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது.

நீதிபதி தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு, சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலையை பற்றிக் கேட்டார். சிறையில் வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு பற்றி சந்திரபாபு நாயுடு அச்சம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்