தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குஜராத்தில் சிக்கிய பாகிஸ்தான் உளவாளி

1 mins read
db85f3c5-73f4-4d03-89e2-1793883cb517
படம்: - தமிழ்முரசு

காந்தி நகர்: குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் பாகிஸ்தான் உளவாளியை இந்திய அதிகாரிகள் கைது செய்தனர்.

ஆனந்த் மாவட்டத்தில் இந்திய சிம் அட்டை மூலம் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு உளவுத் தகவல்களை ஒருவர் அனுப்புவதாக இந்திய ராணுவ உளவுத் துறையிடமிருந்து தங்களுக்கு தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து கண்காணிப்பை அதிகரித்ததாக குஜராத்தின் காவல்துறை தெரிவித்தது.

முக்கிய நபர்களின் கைப்பேசிகளுக்கு நச்சு நிரல்களை அனுப்பி தகவல்களை உளவாளி திருடி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் தூதரகத் தொடர்புடைய நபரின் அறிவுறுத்தலின் பேரில் இது நடந்ததாகவும் இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

பிடிபட்டவர் பெயர் லப்சங்கர் மகேஸ்வரி என்றும் அவர் பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. 1999-ல் இந்தியாவில் குடியேறி அதன் பின்னர் அவருக்கு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது.

இந்திய ராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்களை குறிவைத்து அவர் உளவுத் தகவல்களைத் திரட்டியுள்ளார். விசாரணைத் தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்