கணவரைப் பிரிந்த மகளை மேளதாளத்துடன் வரவேற்ற தந்தை

கணவரைப் பிரிந்த மகளை மேளதாளத்துடன் வரவேற்ற தந்தை

1 mins read
a391e126-8b9c-470e-91d9-b83a7514005e
மகளுடன் தந்தை பிரேம் குப்தா - படம்: இந்திய ஊடகம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் உள்ள பிரேம் குப்தா என்பவர் தனது மகள் சாக்‌ஷி குப்தாவை மாமியார் வீட்டிலிருந்து அழைத்து வந்து கொண்டாடியிருக்கிறார்.

மாமியார் வீட்டில் சாக்‌ஷி அவரது கணவர் மற்றும் அவரது பெற்றோரால் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கணவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்தது சாக்‌ஷிக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து, சாக்‌ஷி தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்.

வீடு திரும்பும் சாக்‌ஷியை அவரது தந்தை மிகுந்த கண்ணியத்துடன் வரவேற்க முடிவு செய்தார்

அக்டோபர் 15ஆம் தேதி நவராத்திரி முதல் நாளன்று திரு குப்தா பஜ்ராவில் உள்ள தனது மகளின் மாமியார் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்து மேள தாளங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் தமது வீட்டுக்கு மகளை அழைத்து வந்தார்.

திருமண விழாவுக்கு ஏற்பாடு செய்வதுபோல மகள் வீடு திரும்பும் நிகழ்ச்சியை உற்றார் உறவினர்கள் சூழ திரு குப்தா கொண்டாடினார்.

இந்த நிலையில் ராஞ்சியில் உள்ள தனது வீட்டிற்கு மகள் திரும்பிய காணொளியை திரு குப்தா சமூக ஊடகத்தில் பதிவிட்டார். அவரது காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.

அந்தக் காணொளியில் மகள்களை மதிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அவர் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்