நான்கு நாள்களில் இரண்டாவது பயிற்சி விமான விபத்து

நான்கு நாள்களில் இரண்டாவது பயிற்சி விமான விபத்து

1 mins read
b3bb8d42-fb70-4b4f-9fa7-2becee148884
பயிற்சி விமான விபத்தில் அதில் பறந்த இருவர் காயத்துடன் உயிர் தப்பியிருக்கின்றனர். - படம்: இந்திய ஊடகம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பாராமதியில் விமானம் ஓட்டும் பயிற்சி அளிக்கும் ‘ரெட் பேர்ட்’ விமானப் பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் சனிக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் விபத்துக்குள்ளானது.

கோஜுபாவி கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு வயலில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது என்று மாலை மலர் தெரிவித்தது.

இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை.

விமானத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த விமானிக்கும் அவருடன் இருந்த பயிற்றுவிப்பாளருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

விமானம் அவசரமாகத் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

கடந்த 19ஆம் தேதியன்று பாராமதி தாலுகாவில் ஒரு விமானம் கீழே விழுந்தது. அந்த விபத்து நிகழ்ந்து நான்கு நாள்களில் அதே போன்று இரண்டாவது சம்பவம் நடந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்