தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சியாச்சின் சிகரத்தில் ராணுவ வீரர் மரணம்

1 mins read
b5a9623b-2bcf-4c96-bc66-251840995099
உயிரிழந்த வீரருக்கு ராணுவம் மரியாதை செலுத்தியது. - படம்: இந்திய ஊடகம்

புதுடில்லி: ஜம்மு-காஷ்மீரின் லே பகுதியில் உள்ள சியாச்சின் சிகரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த இளம் வயது ராணுவ வீரர் ஒருவர் மரணமடைந்தார்.

உலகின் உயரமான ராணுவத் தளமான சியாச்சின் சிகரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவும். குளிர்காலங்களில் மைனஸ் 50 டிகிரி செல்சிஷியஸ் வரை வெப்பநிலை குறையும். இந்தச் சூழ்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் இங்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கு புதிதாக பணியில் சேர்க்கப்பட்ட அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படும் இளம் வயது வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கவதே அக்‌ஷய் லஷ்மன் ஞாயிற்றுக் கிழமை மரணமடைந்ததாக ராணுவம் தெரிவித்தது.

அவரது இறப்புக்கான காரணம் தெரியவில்லை. லஷ்மன் குடும்பத்துக்கு ரூ. 48 லட்சம் ரூபாய் காப்பீடு தொகையும் ரூ. 44 லட்சம் இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்