தூதர்கள் பாதுகாப்பாக இருந்தால் மீண்டும் விசா: இந்திய அமைச்சர்

1 mins read
f098016f-d8d2-4681-8b24-f21a8b418d25
கனடாவில் இந்திய தூதர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் விசா பணி மீண்டும் தொடங்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: கனடிய குடிமக்களுக்கு மீண்டும் விசா வழங்குவதை இந்தியா விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவில் உள்ள இந்திய தூதர்களின் பாதுகாப்பில் முன்னேற்றம் ஏற்பட்டால் அது சாத்தியமாகும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

கனடாவில் உள்ள தனது தூதர்களின் பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய இந்தியா கடந்த செப்டம்பரில் விசா வழங்குவதை நிறுத்தியது.

கனடாவில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இரண்டு நாடுகளுக்கு இடையே பூசல் ஏற்பட்டது.

கனடாவில் ஹர்தீப் சிங் நிஜாரை சில மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இதற்கும் இந்திய புலனாய்வுத் துறைக்கும் தொடர்பு இருக்கிறது என்று கனடா குற்றம்சாட்டியது.

ஆனால் இந்தியா இதனை மறுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்