மும்பை தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு

மும்பை தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு

1 mins read
2fe2de11-790c-441a-bc05-ac376b6a25cd
எட்டு மாடிக் கட்டடத்தில் மூண்ட தீயில் இருவர் மாண்டனர்; மேலும் நால்வர் காயடைந்தனர். - படம்: இந்திய ஊடகம்

மும்பை: மும்பையின் மேற்கு கன்டிவாலி பகுதியில் உள்ள எட்டு மாடிக் கட்டடத்தில் பெரிய அளவிலான தீ மூண்டது.

இவ்விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும் மேலும் நால்வர் மோசமாகக் காயமடைந்ததாகவும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

திங்கட்கிழமை (அக். 23) பிற்பகல் 12.30 மணியளவில் அந்தக் கட்டடத்தின் முதல் தளத்தில் தீ மூண்டது.

பின்னர் அது மற்ற தளங்களுக்கும் விரைவில் பரவியது.

சம்பவ இடத்தில் 10க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீயணைப்புப் படையினர் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாகக் கூறப்பட்டது.

காயமடைந்த நால்வரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாமும்பைதீஉயிரிழப்பு