இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களுக்கு நவம்பரில் சம்பள உயர்வு

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களுக்கு நவம்பரில் சம்பள உயர்வு

1 mins read
cbc70a5a-d36d-4829-a49e-4d5894ce4fb7
சிறப்பாகச் செயல்படும், விசுவாசமான இன்ஃபோசிஸ் ஊழியர்களை இலக்காகக் கொண்டு சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

மும்பை: இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், நவம்பர் 1ஆம் தேதி முதல் அதன் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை வழங்கவுள்ளது.

அந்நிறுவனத்தில் குறிப்பிட்ட சில ஆண்டுகாலம் பணியாற்றி வரும் ஊழியர்களையும் சிறப்பாகச் செயலாற்றியவர்களையும் இலக்காகக் கொண்டு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று இன்ஃபோசிசின் மனிதவளப் பிரிவுத் தலைவர் ஷாஜி மேத்யூ தெரிவித்தார்.

பொதுவாக ஜூன், ஜூலையில் சம்பள உயர்வை அறிவிக்கும் இன்ஃபோசிஸ், கடந்த இரு காலாண்டுகளாக அதைத் தள்ளிவைத்தது. நிறுவனத்தில் ஆக்கபூர்வமற்ற அம்சங்களை எதிர்கொள்ளவே சம்பள உயர்வு தள்ளிவைக்கப்பட்டதாக இன்ஃபோசிஸ் தலைமை நிதி அதிகாரி நிரஞ்சன் ராய் குறிப்பிட்டார்.

இந்தியாவின் ஆகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், 2024 நிதியாண்டின் முதல் காலாண்டில் சம்பள உயர்வு வழங்குவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்