ரூ.1 டிரில்லியன் வரி ஏய்ப்பு; நிறுவனங்களுக்கு இந்திய அரசு கோரிக்கை

1 mins read
893815e7-75ef-4f46-9891-87891991dfaa
இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் இணைய விளையாட்டு நிறுவனங்களுக்குக் கோரிக்கைக் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.  - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் இணைய விளையாட்டு நிறுவனங்களுக்குக் கோரிக்கைக் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

அந்த நிறுவனங்கள், சுமார் ரூபாய் ஒரு டிரில்லியன் ($12.03 பில்லியன்) வரி ஏய்ப்பு செய்து இருக்கின்றன என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

அரசாங்க தகவல் வட்டாரம் ஒன்று புதன்கிழமை இதனைத் தெரிவித்தது.

இணைய விளையாட்டுகளில் முன்பணமாகச் செலுத்தப்படும் மொத்த தொகையின் அடிப்படையில், அத்தகைய நிறுவனங்கள் 28 விழுக்காட்டு வரி செலுத்த வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட்டில் இந்திய அரசாங்கம் முடிவு செய்தது.

அதன் அடிப்படையில் கணக்கிட்டுப் பார்க்கையில், அத்தகைய நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக தெரியவந்து இருக்கிறது என்று தன் பெயரைக் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த விவகாரம் பற்றி கருத்து கூற இந்திய நிதி அமைச்சு மறுத்துவிட்டது.

குறிப்புச் சொற்கள்