ரத்தம் செலுத்தப்பட்ட சிறார்களுக்கு எச்ஐவி: உ.பி.யில் அதிர்ச்சி

1 mins read
7736fc4e-fd05-45e9-b18b-4f6779af8a86
தானம் பெறப்பட்ட ரத்தம், 6 முதல் 16 வயதுக்கு உட்பட்ட 14 சிறார்களுக்குச் செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது. - படம்: இந்திய ஊடகம்

கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூர் அரசு மருத்துவமனையில் மரபணு நோய் பாதிப்புக்கு ஆளான சிறுவர், சிறுமியர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் 14 சிறார்களுக்கு தானமாகப் பெறப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டது. ரத்தம் ஏற்றப்பட்ட 14 குழந்தைகளும் எச்ஐவி, ஹெப்டைடிடிஸ் பி ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

விசாரணையில் சிறார்கள் அனைவரும் கான்பூர், பரூகாபாத், இட்டாவா மற்றும் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், ரத்தத்தைப் பரிசோதிக்காமல் சிறார்களுக்கு செலுத்தப்பட்டதும் தெரிய வந்தது. காவல்துறை இதுகுறித்து விசாரணையைத் தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்