தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆக்ராவில் விரைவு ரயிலில் தீ; யாருக்கும் காயமில்லை

1 mins read
327a84af-3d11-4c81-a19d-a432bb79d1bc
ரயிலின் ஒரு பெட்டியில் திடீரெனத் தீ மூண்டதாகக் கூறப்படுகிறது. - படம்: இந்திய ஊடகம்

ஆக்ரா: பஞ்சாப் மாநிலத்தின் ஃபிரோஸ்பூருக்கும் மத்தியப் பிரதேசத்தின் சியோனிக்கும் இடையே படல்கோட் விரைவு ரயில் சேவை வழங்குகிறது.

அக்டோபர் 25ஆம் தேதி மாலை இந்த விரைவு ரயில் ஆக்ரா ரயில் நிலையத்துக்கு அருகே சென்றபோது, ரயிலின் ஒரு பெட்டியில் திடீரெனத் தீப்பிடித்தது.

இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.

தீப்பிடித்த பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் அந்தப் பெட்டி ரயிலில் இருந்து பிரிக்கப்பட்டு ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

இவ்விபத்தில் யாருக்கும் காயமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்