தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெங்களூரு ஐஃபோன் ஆலையை வாங்கும் டாடா

1 mins read
71b0f8fb-8d82-42f4-8331-2e5f538ce3ab
ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன்களைத் தயாரிக்கும் பெங்களூரு ஆலையை டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வாங்குகிறது - படம்: டாடா எலக்ரானிக்ஸ்

புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன்களை தயாரிக்கும் பெங்களூரு ஆலையை டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

தைவானைச் சேர்ந்த விஸ்ட்ரான் இன்ஃபோகாம் நிறுவனம் பெங்களூரில் ஐஃபோன் உற்பத்தி செய்யும் ஆலை ஒன்றை நடத்தி வருகிறது. இந்த ஆலையை ரூ.1,040 கோடிக்கு வாங்க டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் முடிவு செய்து, அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதற்காக டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஏற்கெனவே தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இந்தியாவின் மிகப் பெரிய ஐஃபோன் தயாரிப்பு ஆலையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்