தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெங்காயம் விலை 57 விழுக்காடு ஏற்றம்

1 mins read
572c55e4-e90e-43b9-8b8f-f006c282d840
வெங்காயத்தின் விலையைக் குறைக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. - படம்: தமிழ் முரசு

புதுடெல்லி: இந்தியாவில் வெங்காயத்தின் விலை 57 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.47 என்ற நிலை உருவாகியுள்ளது.

இதையடுத்து, கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விடுவித்து அதன் விலையைக் குறைக்க இந்திய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

இதன்படி ஒரு கிலோ ரூ.25 என்ற விலையில் வெங்காயத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி தேசிய அளவில் ஒரு கிலோ வெங்காயம் 47 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு கிலோ ரூ.30ஆக இருந்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்