ராஜஸ்தானில் 21 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி

ராஜஸ்தானில் 21 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி

1 mins read
389c6ee5-87a4-4734-b67c-65f825e4ee8a
ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கு 21 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை வெளியிட்டது.

இருநூறு உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலச் சட்டப்பேரவைக்கு நவம்பர் 25ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு டிசம்பர் 3ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி முன்னதாக அறிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து அக்டோபர் 26ஆம் தேதி 23 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி அறிவித்த நிலையில், பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்டப் பட்டியலை கடந்த சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்