தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜெய்சங்கர்: கத்தாரில் எட்டு இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை

1 mins read
f5ddd7c8-5793-4b8c-8626-de00a1871db9
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். - படம்: ராய்ட்டர்ஸ்

டோஹா: கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு இந்தியர்களை விடுதலை செய்ய தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட எட்டு இந்தியர்களின் குடும்பங்களிடம் வெளியுறவுத்துறை தொடர்பில் உள்ளது.

“கத்தாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு இந்தியர்களின் குடும்பங்களைச் சந்தித்துப் பேசினேன். அவர்களது விடுதலைக்காக அனைத்து நடவடிக்கையும் இந்திய அரசாங்கம் தீவிரமாக எடுத்து வருகிறது,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்