கைப்பேசி பறிக்கப்பட்டபோது மாண்ட மாணவி; சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளி

கைப்பேசி பறிக்கப்பட்டபோது மாண்ட மாணவி; சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளி

1 mins read
0a9d4a71-b50f-482b-964f-7d31051c9c92
கைப்பேசி பறிக்கப்பட்டதில் மாணவி ஆட்டோவிலிருந்து விழுந்து படுகாயம் அடைந்தார். - படம்: தமிழ் முரசு

காஸியாபாத்: 19 வயது பல்கலைக்கழக மாணவியான கீர்த்தி சிங்கிடமிருந்து அவரது கைப்பேசியைத் திருடன் பறித்தபோது அவர் ஆட்டோவிலிருந்து விழுந்து படுகாயம் அடைந்து மாண்டார். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமையன்று நிகழ்ந்தது.

அவரது மரணத்துக்குக் காரணமான குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

இந்நிலையில், திங்கட்கிழமை காலை குற்றவாளியைக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

குற்றவாளியான ஜீதேந்திராவைக் காவல்துறையினர் துரத்திச் சென்றபோது, அவர் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் பதிலுக்கு அதிகாரிகள் திருப்பிச் சுட்டதில் குற்றவாளி மாண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வழிப்பறிக் கொள்ளை தொடர்பாக ஜீதேந்திரா மீது 12 வழக்குகள் இருந்ததாகவும் 2020ஆம் ஆண்டில் அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்