மும்பையில் லாரி - ஆம்புலன்ஸ் மோதல்: 4 பேர் பலி

மும்பையில் லாரி - ஆம்புலன்ஸ் மோதல்: 4 பேர் பலி

1 mins read
cac0dbe7-1a42-4fa6-b7d8-0aefbe711f8e
அம்போரா பகுதியில் தமன்காவ்- அகமதுநகர் ரோட்டில் திங்கட்கிழமை மருத்துவ வாகனம் ஒன்று கனரக வாகனத்துடன் மோதி விபத்து நடந்த இடத்தில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். - படம்: ஊடகம்

மும்பை: உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நோயாளி ஒருவரை ஏற்றிக் கொண்டு மருத்துவமனை நோக்கி வேகமாகப் பறந்தது ஒரு மருத்துவ அவசர வாகனம்.

அப்போது அதே திசையில் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று எதிர்பாராத வகையில் வளைந்தபோது மருத்துவ வாகனத்தின் மீது மோதிய இந்த விபத்தில் மருத்துவ வாகனத்தில் சென்ற நோயாளி, மருத்துவர், செவிலியர், ஓட்டுநர் ஆகிய நான்கு பேரும் உயிரிழந்தனர்.

அம்போரா பகுதியில் தமன்காவ்- அகமதுநகர் சாலையில் கடந்த திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது என்று கூறப்படுகிறது. இதில் மருத்துவ வாகனம் நசுங்கிப்போனது.

இந்த விபத்தில் மருத்துவ வாகன ஓட்டுநர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த மருத்துவர் ஆகியோர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் அந்த மருத்துவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். இந்த விபத்துச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சாலை விபத்துமும்பை