தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேலுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காதது குறித்து காங்கிரஸ் கண்டனம்

1 mins read
f197f4d6-0d8b-465f-a487-517fd4974401
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. - ஐஏஎன்ஸ்

புதுடெல்லி: காஸா மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதலை நிறுத்துவதற்கு அழைப்பு விடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதற்கான வாக்கெடுப்பில் இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்கவில்லை. இதற்கு இந்தியாவின் எதிர்க்கட்சிகள் பல கண்டனம் எழுப்பியுள்ளன.

இதுகுறித்து கருத்துரைத்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இஸ்ரேலுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காதது கண்டிக்கத்தக்கது. இஸ்ரேலுடன் பாலஸ்தீனம் சமாதானமாக இணைந்துகொள்ள வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.

அங்கு இறையாண்மையைப் பாதுகாக்க சாத்தியமான மற்றும் பாதுகாப்பான நாடு அமைய நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. காஸாவின் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடக்கும் போரை உடனடியாக நிறுத்துவதற்கு உலக நாடுகள் முயற்சி செய்ய வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்