தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அந்தந்த மாநில மொழிகளில் அரசுத் தேர்வுகள் நடத்த கர்நாடக முதல்வர் வலியுறுத்தல்

1 mins read
6df0ea6a-1026-4efe-b287-d5c4229bde74
தமிழ் முரசு - படம்

பெங்களூரு: வேலைகளுக்கான போட்டித் தேர்வை இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவை எதிர்ப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

இந்தியில் தேர்வு நடத்துவது போல, அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்பட வேண்டும். மாணவர்களுக்கு அவர்களுக்கு தெரிந்த மொழிகளில் தேர்வு வைக்க வேண்டும். அனைவருக்கும் பொதுவானதாக தேர்வு விதிமுறைகள் அமைய வேண்டும் என்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து மறுபரிசீலனை செய்யக் கோரி மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் அவர் கூறினார்.

மத்திய அரசின் பெரும்பாலான தேர்வுகள் இந்தி, ஆங்கில மொழிகளில் நடத்தப்படுகின்றன. இதனால் இந்தி அல்லாத மொழியை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கும், இந்தியை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கும் இடையே சமநிலையற்ற போட்டி ஏற்படுகிறது.

இந்தியில் தேர்வு நடத்தப்படுவதால் வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் தேர்ந்தெடுக்கப்படுவதாகக் கூறி தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய அரசைக் கண்டித்து வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்