சட்டீஸ்கர் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி வெளியானது

சட்டீஸ்கர் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி வெளியானது

1 mins read
9b907fcc-4261-4d24-85e7-b7cbe6fb9e3b
பூபேஷ் பாகேல் - படம்: ஊடகம்
Google News Preferred Icon

ராய்ப்பூர்: ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்; ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை என்று பல வாக்குறுதிகளை வெளியிட்டார் பூபேஷ் பாகேல்.

சட்டீஸ்கரின் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரசும் ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் தீவிரமாக களமிறங்கி உள்ளன.

இந்நிலையில் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் வெளியிட்டார். அதில் “ஆண்டுதோறும் டெண்டு இலை (பீடி இலை) சேகரிப்பவர்களுக்கு ரூ.4,000, விவசாயிகள் கடன் தள்ளுபடி, மழலையர் கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை இலவசக்கல்வி, வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

“குப்சந்த் பாகேல் சுகாதார உதவித் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம், முதலமைச்சரின் சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கப்படும்.

ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்,” என்று வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்