நன்கொடையாளர்கள் பட்டியலில் ஷிவ்நாடாருக்கு முதலிடம்

நன்கொடையாளர்கள் பட்டியலில் ஷிவ்நாடாருக்கு முதலிடம்

1 mins read
59e17c5b-5985-4fd7-ab8b-01d32a54f8b4
ஷிவ் நாடார். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: கடந்த நிதியாண்டில் இந்தியாவின் அதிக நன்கொடை அளித்தவர்களின் பட்டியலில் தொழிலதிபர் ஷிவ்நாடார் முதலிடம் பிடித்துள்ளார்.

அவர் 2,042 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. எச்.சி.எல் நிறுவனரான ஷிவ்நாடார் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.5.6 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

இந்த நன்கொடையாளர்கள் பட்டியலில் விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜியும் அவரது குடும்பத்தாரும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர். இக்குடும்பத்தார் மொத்தம் 1,774 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

336 கோடி ரூபாய் நன்கொடை அளித்து முகேஷ் அம்பானி குடும்பத்தார் மூன்றாவது இடத்திலும், 287 கோடி ரூபாய் நன்கொடை அளித்து குமார்மங்கலம் பிர்லா குடும்பத்தினர் நான்காம் இடத்திலும் உள்ளனர். கவுதம் அதானி குடும்பத்தார் ரூ.285 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.

பெரும்பாலானோர் கல்வி, சுகாதாரத்திற்காக நன்கொடைகளை வழங்கி உள்ள நிலையில் ஷிவ்நாடார் கலை, கலாச்சாரம், பாரம்பரியங்களுக்காக நன்கொடை அளித்துள்ளார். தனிநபராகவும் குடும்பமாகவும் நாடு முழுவதும் 119 பேர், 5 கோடி ரூபாய்க்கு மேல், நன்கொடை அளித்துள்ளதாக ஹுருன் இந்தியா நிறுவனம் பட்டியல் வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
நன்கொடை

தொடர்புடைய செய்திகள்