ஹரியானா: மாணவிகளிடம் அத்துமீறல்: தலைமறைவான பள்ளி முதல்வர் கைது

சண்டிகர்: தனது பள்ளியில் பயிலும் மாணவியர் 60 பேரை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்திய அப்பள்ளியின் முதல்வர், தன் மீது புகார் எழுந்தவுடன் தலைமறைவாகி விட்டார். அவரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு நேற்று அந்தப் பள்ளி முதல்வரை வலைவீசித் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து சிறையில் அடைத்தது.

ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அவர் முதல்வராகப் பணியாற்றி வந்தார். அங்குள்ள மாணவிகளை தன் அறைக்கு வரவழைத்து, தேர்வில் தோல்வியுறச் செய்துவிடுவேன் என்று அச்சுறுத்தி அவர்களிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து 15 மாணவிகள் ஒன்றிணைந்து அதிபர், பிரதமர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதி ஆகியோருக்கு ஐந்து பக்கக் கடிதம் அனுப்பி புகார் தெரிவித்தனர். அதையடுத்து அக்டோபர் 31ஆம் தேதி அந்த பள்ளி முதல்வருக்கு எதிராக உச்சனா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதையடுத்து அந்தப் பள்ளி முதல்வர் தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில், காவல்துறை கண்காணிப்பாளர் அமித் பாட்டியா தலைமையிலான சிறப்புக் குழு ஞாயிற்றுக்கிழமை அந்த முதல்வரைக் கைது செய்தது. காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் விரைவில் முன்னிலைப் படுத்துவார்கள் என்று தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!