மகாராஷ்டிரா மருந்து ஆலை விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மருந்து ஆலை விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

1 mins read
fdec33c0-ff5d-43b6-b479-976f6c4c2e8a
ராய்காட் நகரில் உள்ள புளூ ஜெட் மருந்துத் தயாரிப்பு ஆலை. - படம்: ஊடகம்

ராய்காட்: மகாராஷ்டிர மாநிலத்தின் ராய்காட் மருந்துத் தயாரிப்பு ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு, பயங்கரமான சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. இதில் எட்டுப் பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புளூ ஜெட் ஹெல்த்கேர் நிறுவனத்துக்குச் சொந்தமான மருந்துத் தயாரிப்பு ஆலை ராய்காட் மாவட்டத்தில் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் அந்த ஆலையில் பயங்கர சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது.

ஆலையில் தீப்பற்றி எரிந்தபோது அங்கு மொத்தம் 57 பேர் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அவர்களில் 46 பேர் மீட்கப்பட்டனர். ஏழு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன என்றும் மகாராஷ்டிரா காவல்துறை தெரிவித்துள்ளது.

காணாமல் போனதாகக் கூறப்படும் 4 பேரைத் தேடும் பணி முடுக்கிவிடப் பட்டுள்ளதாக காவல் துறை கூறியுள்ளது. அத்துடன் இந்தச் சம்பவம் தீ விபத்தா அல்லது வெடிப்பா என்பது குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் கண்டறிய காவல்துறை தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்