80,000 டெல்லி அரசு ஊழியர்களுக்கு ரூ.7,000 போனஸ் அறிவிப்பு

1 mins read
353d28a1-d1fd-46e3-ac2f-6be99b02a9ba
டெல்லி அரசாங்க ஊழியர்களுக்கு போனஸ் தொகையை அறிவிக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். - படம்: ஐஏஎன்எஸ்

புதுடெல்லி: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, டெல்லி அரசாங்க ஊழியர்களுக்கு ரூ.7,000 போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திங்கட்கிழமை அறிவித்தார்.

சமூக ஊடகத்தில் அவர் நிகழ்த்திய உரையில், டெல்லி அரசாங்கத்துக்காக ஏறக்குறைய 80,000 ஊழியர்கள் தற்போது பணியாற்றுவதாகத் தெரிவித்தார்.

“போனஸ் வழங்குவதற்காக மொத்தம் ரூ.56 கோடி செலவிடப்படும்,” என்று அவர் கூறினார்.

அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளை திரு கெஜ்ரிவால் தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்