தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘இந்தியா-கனடா உறவு கூடிய விரைவில் வழக்கநிலை திரும்புவது சாத்தியமல்ல’

1 mins read
e17b9c34-4d65-4f51-856f-de037a9e2ab7
சீக்கியப் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜாரின் கொலைக்கு இந்திய உளவுத்துறை காரணம் என்று கனடா குற்றம் சாட்டியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: அண்மையில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான அரசதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டது.

கனடாவில் வசித்து வந்த சீக்கியப் பிரிவினைவாத தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு பிரச்சினை மோசமடைந்தது.

அந்தக் கொலைக்கும் இந்திய உளவுத்துறையினருக்கும் தொடர்பு உள்ளது என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதை அடுத்து இந்தியா கடும் அதிருப்தி கொண்டது.

கனடியர்களுக்கு இந்திய விசா வழங்குவதை இந்திய அரசாங்கம் நிறுத்தியது.

ஆனால் தற்போது அந்தக் கட்டுப்பாடு சற்று தளர்த்தப்பட்டுள்ளது.

ஆனால் இருநாடுகளுக்கும் இடையிலான அரசதந்திர உறவு பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் நீண்டகாலம் எடுக்கக்கூடும் என்று அரசியல் நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஹர்தீப் சிங்கின் கொலை தொடர்பான விசாரணையை கனடா தொடர்கிறது.

தேர்தலுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தயாராகி வருகிறார்.

எனவே, இந்த விவகாரம் குறித்து தீர்வு காணவும் இருநாட்டு உறவை வழக்கநிலைக்குக் கொண்டு வரவும் தற்போதைக்கு முழு கவனம் செலுத்த முடியாது என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்