சத்தீஸ்கர், மிசோரமில் வாக்குப்பதிவு

1 mins read
07ed0460-8706-4f22-bccf-94e718e40b0b
சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாக்களித்த மக்கள். - படம்: இந்திய ஊடகம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர், மிசோரமில் செவ்வாய்க்கிழமை சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் இரு மாநிலங்களிலும் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சத்தீஸ்கரில் மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் 223 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 40.78 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக 5,304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மிசோரமில் ஆளும் தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் முன்னணி, காங்கிரஸ், பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. பாஜக சார்பில் 23 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்