பிரதமர் விதிமீறல்: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

பிரதமர் விதிமீறல்: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

1 mins read
2eb3dcd6-2021-4ffc-9960-12f5c31f0b36
காங்கிரஸின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ். - படம்: இந்திய ஊடகம்

சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, 80 கோடி ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் திட்டமான ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிப்பதாக பிரதமர் மோடி அறிவித்தது தேர்தல் நடத்தை விதிமீறலாகும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

பிரதமர் அறிவிப்பு குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நீட்டிப்பிற்கு மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் அளிக்கவே இல்லை. ஆனால் அதற்கு முன்னதாகவே பொதுவெளியில் மோடி அறிவித்து விட்டார். மோடி எப்படி செயல்படுவார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

அத்துடன், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டமானது தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ன் மாற்றியமைக்கப்பட்ட மறுவடிவம் ஆகும். இச்சட்டத்தை அன்று குஜராத் முதல்வராக இருந்த மோடி எதிர்த்தார். ஆனால் இப்போது அதே திட்டத்திற்கு மோடி ஐந்தாண்டு நீட்டிப்பு வழங்குவது அவரது பலவீனத்தை பிரதிபலிப்பதாகும் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்