கேரளா: பிரியாணிக்குள் கோழியின் தலை கண்டு அதிர்ச்சி

1 mins read
0e3ba3a8-8ec5-407a-b469-3652c838c885
படம்: - ஊடகம்

திருவனந்தபுரம்: கேரளாவின் மலப்புரம் பகுதியில் உள்ள பரோட்டா கடை ஒன்றில் நான்கு பிரியாணிப் பொட்டலங்களை வாங்கினார் பிரதிபா என்பவர்.

அந்தப் பிரியாணிப் பொட்டலங்களை வீட்டுக்கு எடுத்துவந்து ஆசையுடன் பிரித்துப் பார்த்தபோது அதில் ஒரு பொட்டலத்தில் கோழியின் முழு தலை கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அதுகுறித்து திரூர் நகராட்சியின் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த உணவகத்தில் அதிரடிச் சோதனை மேற்கொண்டு அந்த உணவகத்தை மூட உத்தரவிட்டனர்.

பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்த விவகாரத்தில் ஓட்டலை அதிகாரிகள் மூடிய சம்பவம் மலப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்