கர்நாடக மாநில பா.ஜ., தலைவராக எடியூரப்பா மகன் விஜயேந்திரா நியமனம்

1 mins read
56c96ddb-384f-48f3-9fae-9e20165af1cd
விஜயேந்திரா எடியூரப்பா - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: கர்நாடக பாஜக தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ், தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

அக்கட்சி பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.

அப்போது கர்நாடக பாஜகவுக்குத் தலைவராக இருந்த நளின் குமார் கட்டீஸ் இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகினார்.

தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், விஜயேந்திரா எடியூரப்பாவைத் தலைவராக நியமிக்க பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்