திருவனந்தபுரம்: கேரள மாநிலம் களமச்சேரி பகுதியில் கடந்த மாதம் 29ஆம் தேதி நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பெண்கள், 12 வயது சிறுமி என 5 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கொச்சியை சேர்ந்த டாமினிக் மார்ட்டின் கைது செய்யப்பட்டார்.
குண்டுவெடிப்பு சதியின் பின்னணி பற்றி கண்டறிவதற்காக காவல்துறையினர் மட்டுமின்றி என்.ஐ.ஏ. அதிகாரிகளும் அவரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் காவல்துறையினர் காவலில் எடுத்தும் விசாரித்து வந்தனர்.
நீதிமன்றம் வழங்கிய காவல் முடிவடைந்ததையடுத்து, டாமினிக் மார்ட்டினை காவல்துறையினர் புதன்கிழமை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.
டாமினிக் மார்ட்டினை நவம்பர் 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

