மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் நவம்பர் 17ல் தேர்தல்

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் நவம்பர் 17ல் தேர்தல்

1 mins read
dbb49265-63dc-4c87-9a35-768dd0a2ad73
படம்: - இந்திய ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் இந்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது.

இதில் முதலாவதாக மிசோரம் மாநிலத்தில் கடந்த 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அன்று சத்தீஸ்கரின் 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரின் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கும் வெள்ளிக்கிழமை தேர்தல் நடக்கிறது.

இரு மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்படும்.

இரு மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

குறிப்புச் சொற்கள்
தேர்தல்